தமிழ்நாட்டில் பன்றி காய்ச்சல் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 976

ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலூரை சேர்ந்த நபர் நேற்று பன்றி காய்ச்சலால் உயிரிழந்த நிலையில், பன்றி காய்ச்சல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

முன்னதாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார் என்கிற 27 வயது இளைஞருக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

சாலை விபத்தில் மூளை சாவடைந்த 57 வயது ஆண் நபரின் இதயம் இந்த இளைஞருக்கு பொருத்தப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments