பா.ஜ.க. வளருவது பொறுக்காமல் கட்சிப் பிரமுகர்கள் வெட்டிச் சாய்க்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பா.ஜ.க. வளருவது பொறுக்காமல் கட்சிப் பிரமுகர்கள் வெட்டிச் சாய்க்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
நெல்லை பாளையாங்கோட்டை மூளிகுளத்தில் கடந்த 30ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட பா.ஜ.க. பிரமுகர் ஜெகன் பாண்டியன் உடலுக்கு அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் தமிழக காவல் துறையில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவு இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, தூத்துக்குடியில் பேட்டியளித்த அண்ணாமலை, தென் தமிழகத்தில் அண்மையில் 21 வன்முறைக் கொலைகள் நடந்திருப்பதாகவும் கஞ்சா மற்றும் மது போதையால் வன்முறை மாநிலமாக தமிழகம் உருவாகி உள்ளதாக கூறியுள்ளார்.
Comments