உ.பி.யில் மூன்றுமாடிக் கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு

0 1468

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபான்கி எனுமிடத்தில் இன்று அதிகாலை 3 மணி அளவில் மூன்று அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.

வீடுகளில் தூங்கிக் கொண்டு இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர் இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் மோப்ப நாய்களின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments