டிரம்ப் அமெரிக்க அதிபர் வேட்பாளரானால் ஆதரிக்க தயார் - விவேக் ராமசாமி

0 1749

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் அதிபராக பரிந்துரைக்கப்பட்டால் அவருக்கு ஆதரவு அளிப்பதாகவும் தாம் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டால் டிரம்ப்புக்கு பொது மன்னிப்பு வழங்கத் தயார் என்றும் விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது அடுத்த அதிபருக்கான போட்டியில் தமது பெயர் பரிந்துரைக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

38 வயதான இந்திய வம்சாவளி அமெரிக்கரான தொழிலதிபர் விவேக் ராமசாமி தாம் அதிபரானால் டிரம்ப் மீது தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளில் இருந்து விடுவிக்க தயார் என்றார். டிரம்ப்புடன் கொள்கை ரீதியாக பெரிய வேறுபாடு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments