மெக்ஸிகோவில் பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என அறிவிக்கும் விழாவில் விமானம் நொறுங்கி விழுந்ததில் விமானி உயிரிழப்பு..!

0 1852

மெக்ஸிகோவில் பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என அறிவிக்கும் விழாவில் விமானம் நொறுங்கி விழுந்ததில் விமானி உயிரிழந்தார்.

சினோலோவா என்ற இடத்தைச் சேர்ந்த தம்பதியர் தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை குறித்த விழாவை நடத்தினர்.

அப்போது அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும் என்பதைக் குறிக்க சிறிய ரக விமானத்தில் இருந்து இளஞ்சிவப்பு வண்ண புகை வெளியேற்ற திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படியே பைபர் பிஏ-25-235 பாவ்னி விமானமும் புகையை உமிழ்ந்தபடி சென்ற அதே நொடி விமானத்தின் இறக்கை திடீரென உடைந்தது.

இதனால் கட்டுப்பாட்டினை இழந்த விமானம் அங்குமிங்கும் அல்லாடியபடியே தரையில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தை ஓட்டி வந்த லூயிஸ் ஏஞ்சல் என்ற விமானி படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments