ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ட்ரீக் காலமானார்

0 3569

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் தனது 49வது வயதில் காலமானார்.

1993-2005 வரை ஜிம்பாப்வேக்காக 65 டெஸ்ட் மற்றும் 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஸ்ட்ரீக், நீண்ட காலமாக கல்லீரல் புற்றுநோயுடன் போராடி வந்தார்.

இந்நிலையில் நோயின் தாக்கத்தினால் காலமானதாக அவரது மனைவி நாடின் சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில், ஜிம்பாப்வே அணிக்காக ஸ்ட்ரீக், 216 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் ஒரு சதம் மற்றும் 11 அரை சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments