இண்டியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் சந்திக்க முடிவு.. காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் வரும் 5ஆம் தேதி கூடி ஆலோசனை.. !!

0 1714

இண்டியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் வருகிற 5 ஆம் தேதியன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான குழு உருவாக்கம் போன்ற சூழலில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்கொள்ள வேண்டிய அம்சங்கள் மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான நிலைப்பாடு போன்றவை விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments