அமெரிக்காவின் புளோரிடாவில் சூறாவளியால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார் அதிபர் ஜோ பைடன்.. !!
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இடாலியா சூறாவளியால் அதிக பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அதிபர் ஜோ பைடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
காலநிலை மாற்றத்தால் வரலாறு காணாத வெள்ளம், வெப்ப அலை, வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களை நாம் எதிர்கொள்வதாகத் தெரிவித்த ஜோ பைடன், காலநிலை மாற்றத்தை பொருட்படுத்தாமல் ஆட்சியாளர்களால் இருக்க முடியாது என்றார்.
வளிமண்டலத்தில் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த ஜோ பைடன் அரசு விதித்துவரும் கட்டுப்பாடுகளை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துவருவது குறிப்பிடத்ததக்கது.
Comments