‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஆய்வுக் குழுவில் இணைய காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆராய மத்திய அமைச்சர் அமித் ஷா, குலாம் நபி ஆசாத், உள்ளிட்ட 8 பேரைக் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.
இக்குழுவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை வகிப்பார். மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் நகராட்சி மற்றும் உள்ளாட்சி பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது குறித்து இக்குழு பரிசீலிக்கும். இக்குழுவில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இடம் பெற்ற உறுப்பினரான அதிர் ரஞ்சன் சௌத்ரி குழுவில் இருந்து விலகியுள்ளார்.
இக்குழு அமைக்கப்பட்டிருக்கும் விதமே அது எந்தவிதமான முடிவை எடுக்கும் என்று உத்தரவாதமாக தெரிவதாக அவர் விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கேயை குழுவில் இணைக்காமல் குலாம் நபி ஆசாத்தை இணைத்தது ஏன் என்றும் அதிர் ரஞ்சன் சௌத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
Comments