ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர்கள் புருஷோத்மன் ரூபாலா, எல்.முருகன்
கடல் அட்டை மீதான தடையை நீக்குவது குறித்து கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அடுத்த வளமாவூர் பகுதியில் மத்திய அரசின் நிதியின் கீழ் புதிய பல்நோக்கு கடல்பாசி பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில், மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பருஷோத்மன் ரூபாலா மற்றும் இணை அமைச்சர் எல்ருகன் பங்கேற்று அடிக்கல் நாட்டினர்.
சாகர் பராக்கிரமம் பயணத்தின் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் சென்ற மத்திய அமைச்சர்கள், மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்ததுடன் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
பின்னர் பேசிய எல் முருகன், கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு செய்து வருவதாகவும், மீனவர்களிடம் பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் விரைவில் “ஏர் ஆம்புலன்ஸ் சேவை” தொடங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments