ஆக.24 : மளிகை கடையில் மது பானம் திருடிய கருப்பின கர்ப்பிணி பெண் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் மரணம்
அமெரிக்காவில், 2 வாரங்களுக்கு முன், கருப்பின கர்ப்பிணி ஒருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், அந்த பெண் தங்களை காரால் மோதிவிட்டு தப்ப முயன்றதாலேயே துப்பாக்கி சூடு நடத்தியதாக காவல்துறை தரப்பில் காணொலி ஆதாரத்துடன் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 24-ந் தேதி, பிளண்டன் நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் பலர் கும்பலாக வந்து சூறையாடியதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து விரைந்த காவலர்கள் 2 பேர் மதுபான பாட்டில்களை திருடிக்கொண்டு காரில் தப்ப முயன்ற கருப்பின கர்ப்பிணியை வழி மறித்து காரை விட்டு இறங்குமாறு கூறினர்.
அதில் ஒரு காவல் அதிகாரியை அந்த பெண் காரால் மோதிவிட்டு தப்ப முயன்றபோது தனது கைத்துப்பாக்கியால் அவர் அந்த பெண்ணை நோக்கி சுட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியும், வயிற்றிலிருந்த கருவும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
2 போலீசாருக்கும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு துறை ரீதியான விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், சம்பவத்தின்போது அவர்கள் உடலில் பொருத்தியிருந்த கேமராவில் பதிவான காணொலியை ஒஹையோ மாநில போலீசார் வெளியிட்டுள்ளனர்.
Comments