பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சரிசமமான ஈர்ப்புவிசைப் புள்ளியில் ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்படும்
இந்திய உருவாக்கிய செயற்கைக்கோள்களிலேயே ஆதித்யா எல்-1 முற்றிலும் வேறுபட்டது என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்தக் கிரகத்தையும் சுற்றும்விதமாக அல்லாமல், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சரிசமமாக ஈர்ப்பு விசை சேரும் முக்கிய இடமான எல்-1 எனப்படும் .
லாக்ராஞ்சியன் புள்ளியில் சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்படவுள்ளதாக கூறினார்.
இந்த ஆதித்யா எல்-1 திட்டம், சூரியனில் ஏற்படும் சில நிகழ்வுகள் மற்றும் வெடிப்புகள் மூலம் வெளியாகும் கதிர்வீச்சுகளால் ஏற்படும் ஆபத்துகளைக் கண்டறிந்து, விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments