சிலி நாட்டில் மினி பேருந்து மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு..!

0 1231

சிலி நாட்டில் மினி பேருந்து மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

தண்டவாளத்தைக் கடந்து சென்ற அந்த பேருந்தில் 14பேர் பயணம் செய்துள்ளனர். அந்த பேருந்து பாதி தூரம் சென்ற போது மின்னல் வேகத்தில் வந்த பயணிகள் ரயில் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே 5பேரும், மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக சிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments