வெண்டைக்காய்களை மூட்டை மூட்டையாக ஏரியில் கொட்டிய வியாபாரி..! விவசாயிகளுக்கு பணம் கொடுத்து விடுவேன்

0 2628

விவசாயிகளிடம் வெண்டைக்காயை கிலோ ஒரு ரூபாய் விலை கொடுத்து வாங்கி பெங்களூருக்கு அனுப்ப இருந்த நிலையில், அங்கு விலை கடுமையான வீழ்ச்சி அடைந்ததால், 2 டன் வெண்டைக்காய்களை மீன்களுக்கு உணவாக ஏரியில் கொட்டிய சம்பவம் திருப்பத்தூரில் அரங்கேறி உள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் ஒருகிலோ வெண்டைக்காய் 7 ரூபாய் முதல் 14 ரூபாய் வரை விலைவைத்து விற்கப்படும் நிலையில், பெங்களூரு மார்க்கெட்டில் விலை வீழ்ச்சி அடைந்து விட்டதாக கூறி திருப்பத்தூரை சேர்ந்த வியாபாரி ஒருவர் மூட்டை மூட்டையாக வெண்டைக்காய்களை ஏரியில் கொட்டும் காட்சிகள் தான் இவை..!

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மாணவள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ். இவர் திருப்பத்தூர் மாவட்டத்தை சுற்றியுள்ள விவசாயிகளிடம் வெண்டைக்காயை வாங்கி சென்னை, பெங்களூர், கேரளா, உள்ளிட்ட மார்க்கெட்களில் விற்பனை செய்து வருகிறார். சில வாரங்களாக விலை மிகவும் வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக விவசாயிகளிடம் வாங்கப்பட்ட சுமார் 2 டன் வெண்டைக்காயை கந்திலி அருகே உள்ள கள்ளேரி ஏரியில் கொட்டினார்.

மார்க்கெட்டில் தற்போது வெண்டைக்காயின் விலை கிலோ 2 ரூபாய் என மிகவும் குறைந்துள்ளதால் எந்த மார்க்கெட்டிலும் விற்க முடியாத சூழ்நிலை உள்ளது.

விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளிடம் தற்போது வெண்டைக்காயை வாங்காமல் போனால் அடுத்த முறை பயிரிடும் எந்த ஒரு காய்கறிகளையும் வியாபாரிகள் கொடுக்க மாட்டார்கள் என்று தெரிவித்த ரமேஷ், விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ வெண்டைக்காய் இரண்டு ரூபாய் என வாங்கி நட்டத்திற்கு தங்களால் விற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் ஏரியில் வீசியதாகவும் இதன் காரணமாக தனக்கு மட்டும் ஒரு லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆதங்கம் தெரிவித்தார்.

தக்காளியால் லட்சாதிபதியான வியாபாரிகள் வெண்டைக்காயால் பணத்தை இழந்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments