சுதந்திரப் போராட்ட தியாகி நடேசன் நாயக்கர் இல்லத்தில் மண் பெற்றுக்கொண்டார் அண்ணாமலை
‘என் மண் என் தேசம்’ இயக்கத்திற்காக, மறைமலைநகர் நின்னக்கரை கிராமத்தில் உள்ள மறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி நடேசன் நாயக்கர் இல்லத்தில் இருந்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மண் பெற்றுக்கொண்டார்.
தியாகிகள் வீட்டில் இருந்து பெறப்படும் மண் மற்றும் மரக்கன்றுகளை கொண்டு, டெல்லியில் தேசிய போர் நினைவுச் சின்னம் அருகே அமுத பூங்கா அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
அதன்படி, உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை சென்ற தியாகி நடேசன் நாயக்கர் வீட்டில் இருந்து மண் பெற்றுக்கொண்டு, அவர்களது குடும்பத்தினரிடம் அண்ணாமலை உரையாடினார்.
தியாகி நடேசன் நாயக்கர் எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, நேதாஜியுடன் நெருங்கிப் பழகியவர். தியாகிகளுக்கான இந்திய அரசின் தாமிரப் பட்டயம் பெற்றவர் என்றும் சமூகவலைதள பதிவில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சிவானந்த குருகுலம் சென்ற அண்ணாமலை, வளாகத்தில் மரக்கன்று நட்டபின் மாணவர்களிடையே உரையாற்றினார்.
Comments