தண்ணீரில் சமைக்கப்படும் சாப்பாடும் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக கிராம மக்கள் வேதனை

0 1207

சீர்காழி அருகே மேலநாங்கூர் கிராமத்தில் மேல்நிலைத்தொட்டியிலிருந்து வழங்கப்படும் தண்ணீர் மஞ்சள் நிறத்துடன் இருப்பதால் அதில் சமைக்கும் சாப்பாடு, துவைக்கப்படும் துணிகள் என அனைத்தும் மஞ்சள் நிறத்தில் உள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் நிலத்தடி நீர் மஞ்சள் நிறத்துடன் இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த தண்ணீரே மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் ஏற்றப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டும் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை என தெரிவித்த கிராம பெண்கள், கொள்ளிட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments