மாமல்லபுரத்தில் ரூ.6 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகளைத் தொடங்கி வைத்தார் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

0 864

மாமல்லபுரத்தில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மரகதப் பூங்காவை 6 கோடி ரூபாய் மதிப்பில் ஒளிரும் பூங்காவாக மறுசீரமைக்கும் பணிகளை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்.

2009 ஆம் ஆண்டு தமிழக அரசால் அமைக்கப்பட்ட மரகதப் பூங்காவில், 2018ம் ஆண்டு முதல் வார இறுதி நாட்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன.

அங்கு மின் விளக்குகளால் ஒளிரும் தோட்டம் அமைக்க தனியார் பங்களிப்புடன் 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சீரமைப்பு பணிகளை, அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் அமைச்சர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக அலங்கார நடைபாதை, இரவில் வண்ண எல்.இ.டி. விளக்குகளுடன் கூடிய செயற்கை நீரூற்று, உணவகங்கள் போன்றவை அங்கு அமைக்கப்பட உள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments