இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

0 1269

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகூர் பட்டினச்சேரியில் கிராம வரவு-செலவு கணக்கு பார்ப்பதில் மீனவர்கள் இரு தரப்பாக பிரிந்து மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஆயுதங்கள் மற்றும் கட்டை, கற்களால் தாக்கிக்கொண்டதில், நாகூர் நகர பாஜக செயலாளர் ஜெகநாதன், அவரது மனைவி கலைவாணி உள்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யக்கோரி ஒரு தரப்பினர் சாலைமறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டது, சாலை மறியல் செய்தது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கிராமத்தில் பதற்றம் நிலவுவதை முன்னிட்டு அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments