சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் முதல் சாலை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்.
சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள காதர் நவாஸ்கான் சாலையை 24 மணி நேரமும் இயங்கும் சாலையாக மாற்றும் திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்.
பெங்களூருவைப் போன்று வணிக வளாகம், மதுபானக்கூடம், உணவகங்கள், கடைகள் கொண்டு 24 மணி நேரமும் இந்தச் சாலை இயங்க உள்ளது.
அதாவது, பகல் போன்று இரவு வாழ்க்கையும் அமையும் வகையில் எப்போதும் கடைகள் திறந்திருக்கும் வகையில் இச் சாலை மாற்றப்படுகிறது.
சென்னை நகர கூட்டமைப்புத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த நடைபாதை வளாகத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
எல்இடி விளக்குகளுடன் 650 மீட்டர் தொலைவுக்கு காதர் நவாஸ்கான் சாலை மேம்படுத்தப்பட உள்ளது. அடிக்கல் நாட்டிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, இப் பணிகளை அடுத்த 18 மாதங்களில் நிறைவடையும் என்று தெரிவித்தார்.
Comments