நள்ளிரவு முதல் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்... ரூ.5 முதல் ரூ.500 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது
தமிழகத்தில் நள்ளிரவு முதல் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. வாகனங்களின் தன்மைப் பொறுத்து 5 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம், தானியங்கி முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் மேட்டுப்பட்டி, நத்தக்கரை, ஓமலூர் மற்றும் வைகுந்தம் சுங்கச்சாவடிகளிலும், கரூர் மாவட்டம் மணவாசி சுங்கச்சாவடியிலும் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், அங்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கட்டண உயர்வை கண்டித்தும், சுங்கச்சாவடியை அகற்றக் கோரியும் கார், வேன், மினி லாரி ஓட்டுநர்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டண உயர்வைக் கண்டித்து, கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி முன்பு டி.ஒய்.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுமார் 100 பேர் சாலையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
Comments