கெட்டுப்போன கிரில் சிக்கனை பார்சல் செய்துகொடுத்த பிரியாணி பிரதர்ஸ் உணவகம்

0 3858

சென்னையில் பிரபல உணவகத்தில் வாடிக்கையாளருக்கு கெட்டுப்போன கிரில் சிக்கன் வழங்கப்பட்டதாகவும், அதைச் சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

பள்ளிக்கரணையைச் சேர்ந்த முனுசாமி என்பவர், மேடவாக்கம், வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள பிரபல பிரியாணி பிரதர்ஸ் உணவகத்தில் சிக்கன் ரைஸ், கிரில் சிக்கனை வீட்டுக்கு பார்சல் வாங்கிச் சென்றுள்ளார்.

வீட்டில் கிரில் சிக்கனை சாப்பிட்ட அவரது மகன்கள் வாந்தி எடுத்துள்ளனர். இதையடுத்து, அந்த கிரில் சிக்கலை முனுசாமி முகர்ந்து பார்த்தபோது அது கெட்டுப்போய் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. 

மீண்டும் அந்த உணவகத்துக்குச் சென்று கேட்டபோது அங்கிருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்துள்ளனர்.

போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை தெரிந்துகொண்ட உணவகத்தினர், உணவகத்தில் மீதம் இருந்த கெட்டுப்போன இறைச்சிகளை குப்பைத் தொட்டியில் கொட்ட முயன்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே அங்கு வந்த பள்ளிக்கரணை போலீசார், உணவக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அத்துடன், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடமும் முனிசாமி புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து உணவக தரப்பில் செய்தியாளர் கேட்டபோது, போலீசாரிடம் கேட்டுக்கொள்ளுமாறு பதில் அளித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments