கச்சத்தீவு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியிலானது, நீதிமன்றம் தலையிட முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

0 1162
கச்சத்தீவு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியிலானது, நீதிமன்றம் தலையிட முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

கச்சத்தீவு விவகாரம் மத்திய அரசின் கொள்கை சம்பந்தப்பட்டது என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த பீட்டர்ராயன் என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.

தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 1974 -ஆம் ஆண்டு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட பின்பு 1983 முதல் 2005 வரை 378 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அதன் பின்பு 2013-ஆம் ஆண்டு 111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கடந்த ஜூன் மாதம் 19-ந்தேதி 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டனர் என்றும் பின்னர் அதேமாதம் 21-ந்தேதி 22 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல கோடி ரூபாய் மதிப்புடைய படகுகளை அவர்கள் இழந்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், விசாரணை முடிவில் அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments