சென்னை கதீட்ரல் சாலை மேம்பாலத்தின் பெயர் மாற்றப்படுகிறது - சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்

0 7293
சென்னை கதீட்ரல் சாலை மேம்பாலத்தின் பெயர் மாற்றப்படுகிறது - சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு கர்நாடகா சங்கீத இசையமைப்பாளர் டாக்டர்.எம். பாலமுரளிகிருஷ்ணா மேம்பாலம் என பெயர் மாற்றம் செய்வது என சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள சமுதாய நலக்கூடங்களில் ஓய்வு பெற்ற அலுவலர்களின் குடும்ப நிகழ்ச்சிக்கு 50 சதவீத சலுகை கட்டணத்தில் அனுமதி வழங்குதல், கொரோனோ தடுப்பு பணிகளுக்காக வாடகை அடிப்படையில் பயன்படுத்திய வாகனங்களுக்கான நிலுவைத் தொகை தீர்வு செய்ய கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments