ஜி20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் வான் பாதுகாப்பு கவசத்தை அமைத்தது இந்திய விமானப்படை
ஜி 20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் வான் பாதுகாப்பு கவசத்தை இந்திய விமானப்படை ஏற்படுத்தி உள்ளது.
வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கும் ஜி 20 மாநாட்டிற்கு உலகத் தலைவர்கள் பலரும் வரும் நிலையில், அதி தீவிரமான வான் பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களைத் தவிர்க்க போர் விமானங்கள், ஏவுகணை தடுப்பு அமைப்புகள், ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகள் நிறுவப்பட்டு வருகின்றன.
அம்பாலா, பரேலி, சிர்சா, பதிண்டா, குவாலியர் போன்ற பகுதிகளில் உள்ள விமானத் தளங்களில், ரஃபேல், மிராஜ்-2000 மற்றும் சுகோய்-30எம்கேஐ போன்ற விமானங்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் பிற சந்தர்ப்பங்களில் வான்வழி அச்சுறுத்தலைச் சமாளிக்க இதேபோன்ற வான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், தற்போது அதைவிட பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
Comments