நகர்மன்றக் கூட்டத்துக்குள் ரேஷன் அரிசியோடு நுழைந்த நபருடன் வாக்குவாதம் செய்த திமுக கவுன்சிலர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ரேஷன் அரிசியுடன் நுழைந்து அரிசி தரமற்று இருப்பதாக புகாரளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நகர் மன்றக் கூட்டத்திற்குள் சிறு காகித பொட்டலத்தில் ரேஷன் அரிசியோடும், சில்வர் கப் ஒன்றில் அந்த அரிசியில் சமைத்த சாதத்தோடும் திடீரென உள்ளே நுழைந்து பழனி என்பவர் , நகர்மன்றத் தலைவரிடம் முறையிட்டார்.
புழுத்துப்போன அரிசியையும் அதில் சமைத்த சாதத்தையும் காண்பித்து, இதனை தாங்கள் எப்படி சாப்பிடுவது என பழனி கேள்வி எழுப்பினார்.
அப்போது அங்கு வந்த திமுக கவுன்சிலர் ரவி, தாலுகா அலுவலகத்தில் புகாரளிக்க வேண்டும் என்றும் இங்கே வந்து புகார் சொல்லக் கூடாது என்றும் அவரிடம் வாக்குவாதம் செய்தார்.
பழனி அங்கிருந்து வெளியேற மறுத்து வாக்குவாதம் செய்யவே, அவரை போலீசார் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
Comments