குத்தகை கணக்கு தொடர்பாக பட்டினச்சேரி மீனவர் கிராமத்தில் மோதல் 5 பேருக்கு அரிவாள் வெட்டு
நாகப்பட்டினம் அருகேயுள்ள பட்டினச்சேரி மீனவர் கிராமத்தில், குத்தகை கணக்கு தொடர்பாக கடந்த ஆறு மாதமாக இரு பிரிவினருக்கு இடையே பிரச்சனை இருந்த நிலையில் மீண்டும் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
திமுகவை சேர்ந்த மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட 40 பேர், திடீரென திரண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில் ஜெகநாதன் உட்பட 5 பேருக்கு உடலில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த ஜெகநாதனின் ஆதரவாளர்கள், வெட்டாற்று பாலத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது
போராட்டம் காரணமாக நாகை மற்றும் நாகூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Comments