போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக SMS அனுப்பி parivahan இணையதளம் போலவே போலி தளங்களை உருவாக்கிய மோசடி

0 1152

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி நடக்கும் மோசடியில் சிக்கி
பொதுமக்கள் யாரும் பணத்தை இழக்க வேண்டாம் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

சைபர் கிரைம் மோசடி பேர்வழிகள், போக்குவரத்து போலீசாரைப் போலவே பொதுமக்கள் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் இ-சலான்களை அனுப்பி அபராதம் செலுத்த சொல்வதாக பலர் புகார் அளித்துவருகின்றனர்.

மத்திய அரசின் பரிவாஹன் இணையதளம் போலவே தோற்றமளிக்கும் போலி இணையதளத்தை உருவாக்கிய மோசடி கும்பல், அதில் பதிவிடப்படும் கிரடிட் கார்ட், டெபிட் கார்ட் விவரங்களை பயன்படுத்தி வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடிவருவது தெரியவந்துள்ளது.

இதுபோன்ற எஸ்.எம்.எஸ்-களில் வரும் லிங்க்-களை கிளிக் செய்ய வேண்டாம் எனவும், gov.in என முடியும் அதிகாரப்பூர்வ parivahan இணையதளத்தின் மூலம் மட்டுமே அபராதத் தொகையை செலுத்துமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments