நீலகிரி மாவட்டம் தி.மு.க - அ.தி.மு.க கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம்... கண்டன கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர்மன்ற கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீஸார் வரவழைக்கப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டது.
நகராட்சி தலைவர் ஷீலாகேத்ரின் தலைமையில் கூட்டம் துவங்கியதும், நகராட்சி பகுதியில் தரமில்லாமல் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் தி.மு.கவினர் லட்ச கணக்கில் முறைகேடு செய்துள்ளதாகவும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதற்கு தி.மு.க.கவுன்சிலர்கள் எதிர்ர்புத் தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த ஆணையர் ஏகராஜ் காவல்துறையினரை பாதுகாப்பிற்காக வரவழைத்தார்
இருதரப்பினரும் மாறிமாறி கண்டன கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
Comments