ராணுவத்திற்கான செலவீனங்களை அதிகரிக்க ஜப்பான் அரசு முடிவு... ராணுவத்திற்கு 6.16 பில்லியன் டாலர் ஒதுக்கத் திட்டம்

0 1468

வடகொரியா, சீனா போன்ற அண்டை நாடுகளுடனான உறவில் விரிசல் அதிகரித்ததால், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ராணுவத்திற்கான செலவீனங்களை இரட்டிப்பாக்குவது குறித்து ஜப்பான் அரசு பரிசீலித்துவருகிறது.

முன்னெப்பொழுதும் இல்லாத அளவில், அடுத்த ஆண்டு 4 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குமாறு அந்நாட்டு பாதுகாப்புதுறை அமைச்சகம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

அதில் 50 ஆயிரம் கோடி ரூபாயை ஆயுதங்கள் வாங்கவும், அதிலும் குறிப்பாக கப்பலிலிருந்து ஏவக்கூடிய ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே சீனாவுடன் பதற்றமான சூழல் நிலவிவந்த நிலையில், ஃபுகுஷிமா அணு உலை கதிரியக்க கழிவு நீரை ஜப்பான் அரசு பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றியது சீனாவை மேலும் கோபப்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments