மேற்கு ஆப்ரிக்க நாடான கபோனில் வெடித்தது ராணுவ புரட்சி.. அதிபரை சிறை பிடித்து ஆட்சியை பிடித்ததாக ராணுவம் அறிவிப்பு.. !!

0 1054

மேற்கு ஆப்ரிக்க நாடான கபோனில் ராணுவத்தினர் புரட்சி மூலம் ஆட்சியை கைபற்றியுள்ளனர். இதையடுத்து அந்த நாட்டின் அதிபர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது.

தலைநகர் லிப்ரெவெல்லியில் ஆட்சி கவிழ்ப்பை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அதிபர் தேர்தலில் அலி போங்கோ 3-வது முறையாக வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்த ஒரு மணி நேரத்துக்குள் ராணுவத்தினர் ஆட்சியை பிடித்ததாக தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தனர்.

இதனிடையே வீட்டுக்காவலில் உள்ள அதிபர் போங்கோ உதவி கோரியுள்ளார். காபோன் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments