சட்டவிரோதமாக டெட்டனேட்டர் பயன்படுத்தும் கல்குவாரிகள்.. விவசாயி வெளியிட்ட வீடியோ ?.. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை பாயுமா ?
திருப்பூர் அருகேயுள்ள ஊத்துக்குளி அடுத்த வெங்கலப்பாளையத்தில் உள்ள கல்குவாரிகளில் சட்ட விரோதமாக டெட்டனேட்டர்கள் பயன்படுத்தப்படுவதாக விவசாயி ஒருவர் வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்துள்ளார்
நாணல் வெடிகளை பயன்படுத்தி மட்டுமே குவாரியில் கற்களை உடைக்க வேண்டும் என்ற விதிமுறையை மீறி டெட்டனேட்டர் மூலம் அடுத்தடுத்து பாறைகள் தகர்க்கப்படுவதாக விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள வீடியோ காட்சிகள் தான் இவை..!
ஊத்துக்குளி தாலுகாவிற்குட்பட்ட வெங்கலப்பாளையத்தில் செயல்படும் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான கல்குவாரிகளில் கல் உடைப்பதற்கு அனுமதியில்லாத சட்டவிரோத வெடிகளை பயன்படுத்துவதால் தனது 7 ஏக்கர் தோட்டத்தில் விவசாயமும், கால்நடைகளும் அதிகம் பாதிக்கப்படுவதாக நடராஜன் என்ற விவசாயி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் சிசிடிவி பதிவுடன் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் புகார் தெரிவித்த கல்குவாரியை படம் பிடிக்கச்சென்ற செய்தியாளரை மறித்து கேமராவைப் பறித்து பழனிச்சாமி தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டதை தொடர்ந்து அவர் மீது ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் பழனிச்சாமி மற்றும் அவரது கூலியாட்களிடம் விசாரித்து வருகின்றனர்.
Comments