வாரிசு சான்றிதழ் வழங்க ரூபாய் 2000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது.

0 6449

வாரிசு சான்றிதழ் வழங்க ரூபாய் 2000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினர்.

திண்டுக்கல் அருகே உள்ள அடியனூத்து கிராமத்தை சேர்ந்த அன்னலட்சுமி என்ற பெண் கணவர் இறந்துவிட்டதால் வாரிசு சான்றிதழ் கேட்டு பேரன் கோபிநாகராஜை அனுப்பிய நிலையில், அவரிடம் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் 2000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனையடுத்து கோபி நாகராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, அவர்கள் கோபி நாகராஜிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அனுப்பினர்.

அதை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த டி.எஸ்.பி சத்தியசீலன் தலைமையிலான போலீசார் முருகானந்தம் மற்றும் அவரது உதவியாளர் செந்தில்குமார் ஆகியோரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments