கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் நெருங்குவதற்கான அறிகுறி : முதலமைச்சர்

0 1218
கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் நெருங்குவதற்கான அறிகுறி : முதலமைச்சர்

கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் நெருங்குவதற்கான அறிகுறி என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்ததாக பெட்ரோல், டீசல் விலை குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார்.

முன்னதாக கொளத்தூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர், பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதே போன்று, கொளத்தூர் தொகுதியின் பல்வேறு மக்கள் நலத் திட்டப்பணிகளையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

இதனிடையே வீனஸ் காலனியில் காற்றுடன் பெய்த திடீர் மழையால், முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கீழே விழுந்தன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments