காதலிக்க ஒதுங்கிய இடத்தில் லவ்வர் பாய்க்கு அடி உதை... பாய் பெஸ்ட்டீஸ் சம்பவம்..! நல்லா பேரு வச்சாங்க சந்தோஷபுரமுன்னு..
தாம்பரம் சேலையூர் அடுத்த வேங்கைவாசல் சந்தோஷபுரம் குளக்கரை நடைபயிற்சி பாலத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடாததால் , காதலர்கள் ஒருவரை யொருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும், சமூக விரோத செயல்களும் அரங்கேறுவதாக குடியிருப்பு வாசிகள் வீடியோவுடன் புகார் தெரிவித்துள்ளனர்.
காதலியின் நண்பர்கள் தன்னை தாக்கியதற்கு பழிக்கு பழியாக காதலன் , தனது காதலியை தாக்கும் காட்சிகள் தான் இவை..!
மற்றோரு காதலன் காதலியை தாக்கி தலைகீழாக தண்ணீருக்குள் தள்ள முயற்சிக்கும் சம்பவமும் அங்கே நடந்தவை தான்..!
நல்லா பேருவச்சாங்கய்யா... சந்தோச புரமுன்னு... என்று சொல்லும் அளவுக்கு காதலர்கள் ஒதுங்கும் இடமாகவும் குற்றசம்பவங்கள் நடக்கும் இடமாகவும் மாறிப்போயுள்ளது தாம்பரம் சேலையூர் அடுத்த வேங்கைவாசல் சந்தோஷபுரம் குளக்கரையில் உள்ள நடைப்பயிற்சி பாலம்..!
சம்பவத்தன்று இளம் பெண் ஒருவர் தனது காதலனை அழைத்துக் கொண்டு இந்தப்பகுதிக்கு பைக்கில் வந்தார். பைக்கை நிறுத்தி விட்டு ஒதுக்கு புறமான இடத்தை தேடிச்சென்ற போது, சொல்லி வைத்தாற்போல அங்கு பெண்ணின் பாய் பெஸ்ட்டிக்கள் 3 பேர் வந்தனர். அவர்கள் அந்த பெண்ணின் காதலனை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றனர்.
அந்தப்பெண் அவனை தனது காதலன் என்று கூறிய பின்னரும் அவர்கள் தாக்கிவிட்டு பைக்கில் ஏறிச்சென்றனர்.
தாக்குதலில் கீழே விழுந்த காதலனின் செல்போனை எடுத்துக் கொண்டு அங்குள்ள பாலத்திற்கு சென்றார் அந்த இளம் பெண். தாங்கள் இங்கு வரும் தகவல் எப்படி அந்த 3 பேருக்கு தெரிந்தது என்று சந்தேகப்பட்ட இளைஞர் காதலியின் போனை வாங்கி பார்த்த போது , காதலி தனது பாய் பெஸ்டிக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து ரொமன்ஸ் மூடில் இருந்து ஆக்ஷன் மோடுக்கு மாறிய அந்த இளைஞர் ஆள் வைத்தா அடிக்கிற என்று காதலியை கன்னத்தில் விளாசினார்
பின்னர் இருவரும் சண்டையிட்டுக் கொண்டே அங்கிருந்து கிளம்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அங்கு வந்த மற்றோரு காதல் ஜோடி ஒரு வரை ஒருவர் செல்லமாக தாக்குவது போல ஆரம்பித்து ஒரு கட்டத்தில் அந்தப்பெண்ணை கழுத்தை நெரித்து தூக்கி பாலத்தில் இருந்து தலைகீழாக பிடித்து வீச முயன்றார்.
அவர்களும் சண்டையிட்டுக் கொண்டே அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவங்களை எல்லாம் அங்குள்ள வீடு ஒன்றில் இருந்து வீடியோ எடுத்த குடியிருப்பு வாசிகள், தாம்பரம் காவல் ஆணையரின் வாட்ஸ் அப்பில் புகார் அளித்துள்ளனர்.
Comments