தி.மு.க. நகர செயலாளர் காலில் விழுந்த தூய்மை பணியாளர் 4 மாதம் சம்பளம் பாக்கி தரக்கோரிக்கை வைத்தனர்

0 1433

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், 4 மாத சம்பள பாக்கியை வாங்கித் தரக்கோரி தி.மு.க. நகர செயலாளர் காலில் விழுந்து நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு 4 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லையென கூறப்படுகிறது.

இதேப்போன்று, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் தூய்மை பணியாளர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லையென கூறப்படுகிறது.

இதனால், ராஜபாளையம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்ற போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments