"ஊழலில் செந்தில் பாலாஜி முக்கிய மைய பாத்திரமாக செயல்பட்டுள்ளார்" - அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்

0 9709
"ஊழலில் செந்தில் பாலாஜி முக்கிய மைய பாத்திரமாக செயல்பட்டுள்ளார்" - அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்

போக்குவரத்து துறை ஊழலில் செந்தில் பாலாஜி முக்கிய மைய பாத்திரமாக செயல்பட்டுள்ளார் என அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சராக செந்தில்பாலாஜி பதவி வகித்த போது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, ஊழல் மற்றும் சட்டவிரோதமான வழிகளில் பணப் பலன்களைப் பெற்றிருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஓட்டுநர்கள், நடத்துனர்கள், உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு பதவிக்கும் வசூலித்த பணம் தொடர்பான ஆவணங்கள் செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென்டிரைவில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு லஞ்சம் கொடுத்தவர்களுக்கு சாதகமாக, தேர்வு மதிப்பெண்களில் முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் அம்பலமானதாக கூறப்பட்டுள்ளது. வேலைக்காக விண்ணப்பித்தவர்களிடம் இருந்து பணம் வசூல் செய்யப்பட்டு, செந்தில் பாலாஜியின் உதவியாளர் பி.சண்முகத்திடம் டெபாசிட் செய்யப்பட்டதாக சாட்சிகள் தெளிவாகக் கூறியுள்ளனர் என்றும், செந்தில்பாலாஜி, அவரது மனைவி மேகலா, சகோதரர் அசோக்குமார் ஆகியோரது வங்கி கணக்குகளில் வருமானத்துக்கு அதிகமாக 15 கோடி ரூபாய் இருந்தது என்றும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments