விஜிபி குழும நிர்வாகி அமல்தாஸ் ராஜேஷ் பெங்களூரு காவல்துறை பெயரில் போலி அறிக்கை தயார் செய்து மோசடி

0 1870

விஜிபி குழும நிர்வாகி அமல்தாஸ் ராஜேஷ், அசல் ஆவணம் காணாமல் போனதாக பெங்களூர் காவல் துறையின் போலியான அறிக்கையை சமர்ப்பித்து பலகோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில்  விஜிபி சந்தோஷ் நகர் உள்ளது. இந்த நிலத்தை 2016 ஆம் ஆண்டு ராம்குமார் என்பவருக்கு விஜிபி குழும நிர்வாகி பி ஜி எஸ் அமல் தாஸ் ராஜேஷ் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.

அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் மீது அப்போதைய சார்பதிவாளர் ஜாபர் சாதிக் என்பவருக்கு சந்தேகம் எழவே, நிலத்தின் அசல் ஆவணங்களை கேட்டுள்ளார்.

அதற்கு அசல் ஆவணம் பெங்களூருவில் காணாமல் போய்விட்டதாகவும் அது தொடர்பாக அம்மாநில போலீசில் அளித்த புகார் அளித்துள்ளதாகவும் கூறி, அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

பெங்களூரு காவல்துறையின் கியூ ஆர் கோடு மூலம் ஆய்வு செய்தபோது, அந்த அறிக்கை போலியானது என்பதும் அதிலிருந்த காவல் உதவி ஆய்வாளரின் கையொப்பமும் பொய்யானது என்றும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அமல்தாஸ் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே அமல்தாஸ் மீது பல்வேறு போலி ஆவண மோசடி வழக்குகள் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments