கலிஃபோர்னியாவில் ஏலத்திற்கு வரும் மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் 3 கவுன்கள் செப்.6 முதல் 8-ம் தேதி வரை நடைபெறும்

0 1364

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா உடுத்திய 3 கவுன்கள் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏலத்திற்கு வருகின்றன.

ஜூலியன்ஸ் என்ற ஏல நிறுவனம் சார்பாக அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெறும் ஏலத்தில் இந்த கவுன்கள் ஏலம் விடப்படவுள்ளன.

1997-ம் ஆண்டு டயானா விபத்தில் இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்னர் தொண்டு நிறுவனங்கள் சிலவற்றுக்காக தமது 70 கவுன்களை ஏலம் விட்டிருந்தார்.

அதில் 3 கவுன்களை ஏலம் எடுத்த மிச்சிகனை சேர்ந்த எலன் பெத்தோ என்ற பெண்மணி அண்மையில் காலமானதையடுத்து அவரிடம் இருந்த டயானாவின் உடைகள் மீண்டும் ஏலத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 கவுன்களில் டயானா பல முறை அணிந்த, முழுவதும் சிவப்பு நிறத்தில் உள்ள கவுன், அதிகப்படியாக 4 லட்சம் டாலர் வரை ஏலம் போகக் கூடும் என்று எதிர்ப்பார்ப்பதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments