மக்களவைத் தேர்தல் முன்கூட்டியே நடைபெற வாய்ப்பு.. மம்தா பானர்ஜியைத் தொடர்ந்து நிதிஷ்குமாரும் அதே கருத்து

0 2022

மக்களவைத் தேர்தல் முன்கூட்டியே டிசம்பர் மாதத்தில் நடத்தப்படலாம் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியிருந்த நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியினரின் ஒற்றுமை வளர்ந்தால் தேர்தலில் பலத்த தோல்வியை சந்திக்க நேரும் என்ற அச்சத்தால் பாஜக தேர்தலை முன்கூட்டியே டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்த திட்டமிட்டிருப்பதாக நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தாம் இதனை ஏழெட்டு மாதங்களாக கூறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் நிதிஷ்குமார் அழைப்பு விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments