சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியம்..!
நாடு முழுவதும் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த மத்திய அமைச்சர் அனுராக்தாகூர், ஓணம் பண்டிகை மற்றும் ரக்ஷா பந்தனை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பிரதமர் மோடி வழங்கும் பரிசு இது என கூறினார்.
வறுமை கோட்டுக்கு கீழ் மக்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு ஏற்கனவே 200 ரூபாய் சிலண்டர் மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பின் மூலம் சிலிண்டர் விலையில் அவர்களுக்கான மானியம் 400 ரூபாயாக உயரும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏற்கனவே நாடு முழுவதும் 9 கோடியே 60 லட்சம் பேர் பயனடைந்து வரும் நிலையில், அத்திட்டத்தில் மேலும் 75 லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட இருப்பதாகவும் அனுராக்தாகூர் கூறினார்.
Comments