பொன்னேரி அரசுப் பள்ளியில் பாடப்பிரிவை பொறுத்து கூடுதலாக ரூ.1,000 முதல் ரூ.3,500 வரை வசூல்

0 6059

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக 10 மடங்கு வரையில் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

நடப்பு கல்வியாண்டின் துவக்கத்தில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கையின் போது க்ரூப் வாரியாக ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 ரூபாய் வரையில் கட்டணமாக வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்திருந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி பள்ளியில் நேற்று நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில், பொறுப்பு தலைமை ஆசிரியராக இருந்து பணம் வசூலித்த சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், பள்ளியில் கூடுதலாக ஒரு ஆசிரியர், கிளர்க், மற்றும் 2 தூய்மைப்பணியாளர்கள் என 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டிய உள்ளது.

எனவே, பள்ளி மேலாண்மை குழுவினரிடம் தகவல் தெரிவித்து அவர்கள் அனுமதி உடன் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் அளித்து விட்டு தான் கட்டணம் வசூலித்ததாக தெரிவித்தார்.

கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம் இரண்டு நாட்களில் திருப்பி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments