கடலூரில் பள்ளி வேன் வாய்க்காலில் கவிழ்ந்ததில் 10 மாணவர்கள் காயம்

0 2099

கடலூர் மாவட்டம் பெத்தாங்குப்பத்தில் ரயில்வே கேட் அருகே நிறுத்தப்பட்டிருந்த பள்ளி வேனின் கியரில் மாணவர்கள் கை வைத்ததால் பின்னோக்கி நகர்ந்து வாய்க்காலில் விழுந்ததில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.

ஆலப்பக்கத்திலிருந்து பெத்தாங்குப்பம் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தபோது, வேனை நிறுத்தி விட்டு என்ஜினை ஆப் செய்யாமல் ஓட்டுநர் கீழே இறங்கி செல்போனில் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

காயமடைந்த மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments