மும்பையில் இந்தியா கூட்டம் ஆக.31, செப்.1ல் நடக்கிறது... பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிக்க காங்கிரஸ் கட்சி திட்டம்
காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியின் பெயரை அறிவிக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.
நாளை மறுநாள் மும்பையில் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பான இந்தியாவின் மூன்றாவது கூட்டம் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் வேட்பாளருக்கான போட்டி தொடங்கி விட்டது.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடும் தகுதி உள்ளவர் என்று ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது.
ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட சட்டிஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதே போல, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிறுத்த திட்டமிட்டுள்ளது.
Comments