விமானத்தின் இறக்கையில் நடனமாடிய பெண் -ஆண் பணியாளருக்கு ஸ்விஸ் விமானப் போக்குவரத்து நிர்வாகம் கண்டனம்
சுவிஸ் நாட்டு போயிங் விமானத்தின் இறக்கையில் விமானப் பணிப்பெண் ஒருவர் சீருடையுடன் நடனமாடிய வீடியோ இணையங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அர்ஜென்டைனாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இருந்து புறப்பட தயாராக இருந்த சுவிசின் 777 போயிங் விமானத்தின் அவசர வழியை பயன்படுத்தி வெளியேறிய பெண் பணியாளர் நடனமாடியுள்ளார்...
தன்னுடன் துணைக்கு ஆட வருமாறு ஆண் பணியாளரை அழைக்க அவரும் இறக்கை பகுதிக்கு வந்துள்ளார். இந்த காட்சியை பயணி ஒருவர் தமது போன் காமிரா மூலம் பிடித்து வைரல் ஆக்கியுள்ளார்.
இரு பணியாளரின் செயலுக்கும் ஸ்விஸ் விமானப் போக்குவரத்து நிர்வாகம் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
Comments