பீகாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த தடை கோரியது மத்திய அரசு
பீகாரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க பீகார் அரசுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பட்டியலின மக்களின் வளர்ச்சிக்காக அரசமைப்புச் சட்ட விதிமுறைகளின்படி பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பீகாரில் கடந்த 6ம் தேதி சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கியதாக பீகார் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Comments