கோவில்களில் அர்ச்சகர்களின் தகுதி குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு
கோவில்களில் அர்ச்சகர்களின் தகுதி குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வில், திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலில் செயல் அதிகாரியால் மரபுகள் மீறப்படுவதாக கூறி, ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், திருப்பணிக்குழு அமைக்காமல் எப்படி பாலாலயம் நடத்தப்படுகிறது? திருப்பணிக்கு நன்கொடையாக வரும் பணம் தணிக்கை செய்யப்படுகிறதா என கேள்வி எழுப்பினர்.
பின்னர் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள் சிறுவர்களும் அர்ச்சகர்களாக செயல்படுவதால், அர்ச்சகர்கள் நியமனத்துக்கு வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும், கோவில்களை சீரமைக்க அனுமதி வழங்கும் புராதன குழு உள்ளிட்ட குழுக்கள் மாற்றியமைக்கப்படும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
Comments