டெல்டாக்காரன் என கூறிக்கொள்ளும் முதலமைச்சரால் காவிரி பிரச்சனைக்கு உரிய தீர்வு காண முடியவில்லை - இபிஎஸ் விமர்சனம்
டெல்டாக்காரன் என கூறிக்கொள்ளும் முதலமைச்சரால் காவிரி பிரச்சனைக்கு உரிய தீர்வு காண முடியவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதிய தன்ணீர் கிடைக்காததால் டெல்டா விவசாயிகள் நடவு செய்த பயிர்கள் கருகி வருவதாக கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் 40 சதவீதம் அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளதாக கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, விலைவாசியை கட்டுப்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Comments