கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

0 958

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்த போது பதுங்கி ஒளிந்து கொண்டிருந்த பயிற்சி மருத்துவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

பயிற்சி மருத்துவர் ஒருவர் அமைச்சரைக் கண்டதும் அறை ஒன்றில் பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை வெளியே வரவழைத்து விசாரித்து, பயிற்சிக்கு செல்லாமல் ஒளிந்து கொண்டிருந்ததை அறிந்து, மாணவருக்கு அறிவுரை கூறி அனுப்பினார்.

ஆய்வின் போது, சிகிச்சை பெறுவோருக்கு உரிய வசதிகளை செய்யவில்லை எனக் கூறி மருத்துவமனை டீனை உடனடியாக இடம் மாற்றம் செய்ய உத்தரவிட்டார்.

அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்காக 10 தண்ணீர் படுக்கை ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இதுவரை அதற்கான வார்டு வசதி ஏன் ஏற்படுத்தவில்லை என ஆய்வின் போது கேள்வி எழுப்பிய அமைச்சர், சென்னையில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து தங்கி இருந்து ஆய்வு செய்யுமாறும் உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments