சென்னை மாநகராட்சி சார்பில் 100 மாணவர்களுக்கு 27 லட்சத்தில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சி

0 2586

சென்னையில் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 100 மாணவர்களுக்கு 27 லட்சம் ரூபாய் செலவில் பயிற்சி உடைகள், காலணி, உபகரணங்கள் இலவசமாக வழங்கி கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

சிட்டிஸ் என்ற சிறப்பு திட்டம் மூலமாக மாநகராட்சி பள்ளிகளை புதுமை மற்றும் மாதிரி பள்ளிகளாக மாற்றுவதற்காக 95 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், கிரேட் கோல்ஸ் அறக்கட்டளை சார்பில் கால்பந்து பயிற்சியும், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வழிகாட்டுதலில் இயங்கும் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கிரிக்கெட் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments