சீனாவின் கிழக்குப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்
சீனாவில் கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பல மாகாணங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், தண்ணீர் சூழ்ந்ததால் நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
ஹெனான் மற்றும் ஹூபே மாகாணங்களில் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பலர் வீடுகளில் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
வழக்கத்திற்கு மாறாக கோடைகாலத்தில் பெய்து வரும் கனமழையால் சீனா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் டோக்சுரி சூறாவளியால் சீனாவில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தகக்து.
Comments